
இந்த முறை ஆசியக் கோப்பைத் தொடர் ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை என இரண்டு நாடுகளில் வைத்து நடத்தப்படுகிறது. பாகிஸ்தானில் வைத்து நடத்தப்பட்டால் இந்தியா பங்கேற்காது என்று திட்டவட்டமாக கூறிய காரணத்தினால், ஆசியக் கிரிக்கெட் கவுன்சில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துடன் பேச்சு வார்த்தை நடத்தி சம்மதிக்க வைத்திருக்கிறது.
இந்த நிலையில் மொத்தம் 13 போட்டிகளில் ஒன்பது போட்டிகள் இலங்கையில் நடைபெறுகிறது. நான்கு போட்டிகள் மட்டுமே பாகிஸ்தானில் வைத்து நடத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதில் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நேபாள் ஆகிய மூன்று அணிகளும், பி பிரிவில் இலங்கை, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் ஆகிய மூன்று அணிகளும் இடம்பெறுகின்றன.
முதல் சுற்றில் ஒவ்வொரு குழுவிலும் இருக்கும் அணிகள் தங்களுக்குள் ஒரு ஆட்டத்தில் மோதிக்கொள்ளும். இதில் குழுவில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறும். அடுத்த சுற்றுக்கு முன்னேறும் நான்கு அணிகளும் மற்ற அணிகளுடன் தலா ஒரு போட்டியில் விளையாடும். இந்தப் புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெறும்.