பாலியல் குற்றச்சாட்டு: ஆஸ்திரேலிய வீரருக்கு 4 ஆண்டுகள் சிறை!
பாலியல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஆரோன் சம்மர்ஸுக்கு 4 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவு.
ஆஸ்திரேலிய டெஸ்ட் அணி கேப்டனாக இருந்த டிம் பெயின், பெண்ணுக்கு தகாத மெசஜ் அனுப்பி சர்ச்சையில் சிக்கினார்
அந்த பிரச்சினை அடங்குவதற்குள் மற்றொரு ஆஸ்திரேலிய வீரர் சிறுமிகளிடம் சில்மிஷம் செய்து தற்போது கம்பி எண்ணி வருகிறார். இந்த விவகாரம் தற்போது ஆஸ்திரேலிய கிரிக்கெட்டுக்கு தலைக்குணிவை ஏற்படுத்தியுள்ளது.
Trending
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஆரோன் சம்மர்ஸ், பிக் பேஷ் கிரிக்கெட் தொடரில் ஹாபர்ட் ஹரிகேன்ஸ்க்கு அணிக்காக விளையாடியவர். இவர் சமூக வலைத்தளங்களில் சிறுமிகளுக்கு தகாத வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை அனுப்பியுள்ளார்.
மேலும் சிறுமிகளின் புகைப்படங்களை சேகரித்து அவர்களை வெளியே சொல்ல கூடாது என்று மிரட்டியுள்ளார். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் ஆரோன் சம்மர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இது தொடர்பான விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில் ஆரோன் சம்மர்ஸ் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதால் அவருக்கு அதிகபட்சமாக 4 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பாக ஆஜரான வழக்கறிஞர் ஹானா ஓயிட், “பெரும்பாலும் எவ்வித குற்றப் பின்னணியில் இல்லாத நாம் அன்றாட வாழ்வில் பார்க்கும் நபர்களே இதுபோன்ற குற்றங்களில் இடுபடுவதாகவும், அதற்கு ஆரோன் சம்மர்ஸ் மிகப் பெரிய எடுத்துக்காட்டு” என்று கூறினார்.
Win Big, Make Your Cricket Tales Now