இங்கிலாந்து முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மைக் ஹென்ரிக் காலமானார்
இங்கிலாந்து அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மைக் ஹென்ரிக் உடல்நலக் குறைவு காரணமாக நேற்றிரவு உயிரிழந்தார்.
இங்கிலாந்து அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மைக் ஹென்ரிக். இங்கிலாந்து அணிக்காக 1974ஆம் ஆண்டு அறிமுகமான இவர், 1979ஆம் ஆண்டு வரை அந்த அணியின் மிக முக்கிய பந்துவீச்சாளராக திகழ்ந்து வந்தார்.
மேலும் இங்கிலாந்து அணிக்காக 26 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள இவர், 87 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். அதேசமயம் ஒருமுறை கூட ஐந்து விக்கெட்டுகளை எடுக்காமல் அதிக டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தி பந்துவீச்சாளர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு.
Trending
மேலும் 1979ஆம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்து அணியை இறுதிப்போட்டிக்கு அழைத்து சென்ற பெருமையும் இவருக்கு உண்டு. அதேபோல் அத்தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையையும் பெற்றார்.
இந்நிலையில் நேற்று இரவு உடல்நிலை காரணமாக மைக் ஹென்ரிக் உயிரிழந்தார். அவருக்கு வயது 72. இத்தகவலை டெர்பிஷையர் கவுண்டி கிளப் உறுதி செய்து, இறங்கலை வெளியிட்டுள்ளது. இவரது இறப்பு செய்தியறிந்த கிரிக்கெட் வீரர்கள் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.
Win Big, Make Your Cricket Tales Now