Advertisement

சிஎஸ்கே அணியின் அடுத்த கேப்டனாக யாரை நியமிக்கலாம்?- சுனில் கவாஸ்கர் கருத்து!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அடுத்த கேப்டனாக ரவீந்திர ஜடேவுக்கு மீண்டும் வாய்ப்பு தர வேண்டும் என சுனில் கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார். 

Advertisement
Former India captain bats for Ravindra Jadeja to be CSK captain again
Former India captain bats for Ravindra Jadeja to be CSK captain again (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
May 04, 2023 • 07:58 PM

ஐபிஎல்லில் 15 சீசன்கள் வெற்றிகரமான முடிந்துள்ள நிலையில், 16வது சீசனும் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்த 15 சீசனில் 4 முறை கோப்பையை வென்று ஐபிஎல்லின் வெற்றிகரமான அணியாக திகழும் சிஎஸ்கே அணி, இந்த சீசனிலும் அபாரமாக ஆடி வெற்றிகளை குவித்துவருகிறது. 2 சீசனை தவிர மற்ற அனைத்து சீசன்களிலும் பிளே ஆஃபிற்கு தகுதிபெற்ற சிஎஸ்கே அணி, ஐபிஎல்லில் ஃபைனல் வரை செல்வதையும், கோப்பையை வெல்வதையும் ஒரு வழக்கமாகவே வைத்துள்ளது. 

Bharathi Kannan
By Bharathi Kannan
May 04, 2023 • 07:58 PM

அந்தளவிற்கு அந்த அணி ஆதிக்கம் செலுத்த முக்கிய காரணம் கேப்டன் தோனி தான். எனவே சிஎஸ்கே அணி தொடர்ந்து இதேமாதிரி ஜொலிக்க வேண்டுமானால் அதற்கு சிறப்பான கேப்டன் அவசியம். எனவே தோனிக்கு அடுத்த கேப்டன் யார் என்ற கேள்வி வலுத்துவருகிறது. தான் இருக்கும்போதே அடுத்த கேப்டனை உருவாக்கி கொடுத்துவிட வேண்டும் என நினைத்த தோனி, கடந்த சீசனில் ஜடேஜாவை கேப்டனாக்கினார். ஆனால் ஜடேஜா கேப்டன்சியில் ஜொலிக்கவில்லை. அவரது கேப்டன்சியில் சிஎஸ்கே அணி தொடர் தோல்விகளை தழுவியது. 

Trending

மேலும் ஜடேஜா ஒரு கேப்டனாக சுதந்திரமாக செயல்பட முடியாத சூழலும் இருந்தது. தோனியின் தலையீடுகள் அதிகம் இருந்தன. பல்வேறு குழப்பங்களுக்கு மத்தியில் கடந்த சீசனின் பாதியில் கேப்டன்சியிலிருந்து விலகினார் ஜடேஜா. அதன்பின்னர் சிஎஸ்கே அணியுடனான மோதல் போக்கையும் மீறி, ஜடேஜா சிஎஸ்கே அணியால் தக்கவைக்கப்பட்டார். தோனிக்கு இதுவே கடைசி சீசனாக இருக்கலாம் என்பதால் சிஎஸ்கே அணியின் அடுத்த கேப்டன் யார் என்பது குறித்து விவாதிக்கப்படுகிறது. முன்னாள் வீரர்கள் பலரும் இதுதொடர்பாக தங்களது கருத்துகளை கூறிவருகின்றனர்.

தோனியை போன்ற மிகவும் கூலான, நிதானமான, தெளிவான ஒருவரை கேப்டனாக நியமிக்க வேண்டும். அவர் சிறந்த வீரராகவும் இருக்க வேண்டும். அந்தவகையில், தோனியின் கேப்டன்சி மரபை பின் தொடர்ந்து சிஎஸ்கே அணியை சிறப்பாக வழிநடத்த ருதுராஜ் கெய்க்வாட்டால் தான் முடியும் என்று பெரும்பாலான முன்னாள் வீரர்கள் நம்புகின்றனர்.

ஆனால் முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர், “ஜடேஜாவிற்கு மீண்டுமொரு வாய்ப்பு வழங்கலாம் என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள கவாஸ்கர், ரவீந்திர ஜடேஜாவுக்கு மற்றுமொரு வாய்ப்பு கொடுக்கலாம். ஜடேஜாவுக்கு கடந்த ஆண்டு சிறப்பானதாக அமையவில்லை.  கேப்டன்சி ஈசியான விஷயம் அல்ல. கடந்த சீசனில் அவருக்கு கேப்டன்சி கடினமானதாக இருந்தது. 

ஆனால் இப்போது அவருக்கு அந்த அனுபவம் கிடைத்துவிட்டது. எனவே அவரால் ஒரு கேப்டனாக சிறப்பான கம்பேக் கொடுக்க முடியும். ருதுராஜ் கெய்க்வாட்டை துணை கேப்டனாக நியமிக்கலாம். ஆனால் கேப்டன்சியை ஜடேஜாவிடம் தான் கொடுக்க வேண்டும். மீண்டுமொருமுறை ஜடேஜாவை கேப்டனாக்க வேண்டும். மிகவும் நிதானமாக வீரராக இருக்கிறார் ருதுராஜ் கெய்க்வாட். அவரை எதிர்கால கேப்டனாக உருவாக்கலாம்”  என்று தெரிவித்துள்ளார். 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement