Advertisement

கபில் தேவ்வின் மறைமுக தாக்குதல்; வாய்ப்பை இழக்கப் போகும் அதிரடி வீரர்!

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் கூறிய கருத்தினால் அதிரடி ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவுக்கு இனி இந்திய டெஸ்ட் அணியில் வாய்ப்பு கிடைப்பது கேள்விக்குறியாகியுள்ளது.

Advertisement
former-indian-captain-kapil-dev-took-a-jibe-at-hardik-pandya
former-indian-captain-kapil-dev-took-a-jibe-at-hardik-pandya (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Jul 02, 2021 • 09:57 PM

இங்கிலாந்தில் நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது. இந்த தோல்வியினால் இந்திய அணியின் மீது பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. 

Bharathi Kannan
By Bharathi Kannan
July 02, 2021 • 09:57 PM

அதுமட்டுமின்றி ஏற்கனவே இறுதிப் போட்டி முடிந்து பேசிய இந்திய அணியின் கேப்டன் கோலி அணியில் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் இல்லாதது ஒரு மிகப்பெரிய குறையாக உள்ளது என்று கூறியுள்ளார்.

ஏற்கனவே இந்திய அணியில் இடம்பெற்றிருந்த வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா சிறப்பாக ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தாலும், சமீப காலமாகவே காயத்தால் அவதிப்பட்டு அவ்வப்போது விளையாட முடியாமல் தவித்து வருகிறார் .

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பண்டியாவின் உடற்தகுதி குறித்து பேட்டியளித்த கபில்தேவ் கூறுகையில், “எங்கள் காலத்தில் எல்லாம் வேகப்பந்து வீச்சாளர்கள் எத்தனை ஓவர்கள் தொடர்ச்சியாக பந்து வீசினாலும் அவ்வளவாக சோர்வடைவது இல்லை.

ஆனால் தற்போதைய வேகப்பந்து வீச்சாளர்கள் 4 ஓவர்கள் வீசினாலே சோர்வாகி விடுகின்றனர் என்று வெளிப்படையாக பாண்டியா மீதான தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். மேலும் வீரர்களுக்கு காயம் ஏற்படுவது சகஜம் என்றும் வீரர்கள் மீண்டு வந்து சிறப்பாக விளையாட வேண்டும் என்றும் அவரை மறைமுகமாக விமர்சித்து பேசியிருந்தார். 

இது ஒருபுறமிருக்க பாண்டியா இலங்கை தொடரில் தான் பந்துவீச இருப்பதாகவும், அறுவை சிகிச்சைக்கு பிறகு தனது உடல் தகுதி முழுமையாக இல்லாத காரணத்தினால் பந்துவீச இயலவில்லை என்றும் கூறியிருந்தார்.

ஆனால் தற்போது மீண்டும் முழு வேகத்தில் நான் பந்துவீச தயாராகி வருகிறேன் என்றும் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் அடிக்கடி காயம் காரணமாக அவதிப்படும் பண்டியாவிற்கு பதிலாக ஷர்துல் தாகூர், விஜய் ஷங்கர் அல்லது சிவம் துபே ஆகியோரை தயார் செய்து வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டராக விளையாட வைக்கலாம் என்று தேர்வு குழு நினைப்பதால் நிச்சயம் பாண்டியாவுக்கு இந்திய டெஸ்ட் அணியில் இடம் கிடைப்பது கேள்விக்குறியாகியுள்ளது.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement