இங்கிலாந்து அணியின் பயிற்சியாளராக இருக்க கேரி கிரிஸ்டன் விருப்பம்!
இங்கிலாந்து டெஸ்ட் அணியின் பயிற்சியாளராகப் பணியாற்ற தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் கேரி கிரிஸ்டன் விருப்பம் தெரிவித்துள்ளார்.
நடப்பு 2021இல் இங்கிலாந்து அணி 9 டெஸ்டுகளில் தோல்வியடைந்ததுடன் 12 நாள்களில் ஆஷஸ் தொடரையும் இழந்துள்ளது. இதனால் அந்த அணியின் பயிற்சியாளர் கிறிஸ் சில்வர்வுட் மீது விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில் இங்கிலாந்து டெஸ்ட் அணியின் பயிற்சியாளராகப் பணிபுரிய தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் கேரி கிரிஸ்டன் விருப்பம் தெரிவித்துள்ளார்.
Trending
கேரி கிரிஸ்டன் பயிற்சியாளராக இருந்தபோது இந்திய அணி 2009இல் முதல்முறையாக டெஸ்ட் தரவரிசையில் முதல் இடம் பிடித்தது. அதன்பின் 2011இல் ஒருநாள் உலகக் கோப்பையை வென்றது. அதன்பிறகு தென்னாப்பிரிக்க அணியின் பயிற்சியாளர் ஆனார் கிரிஸ்டன்.
அவரது பயிற்சி காலத்தில் இங்கிலாந்தை 2-0 எனத் தோற்கடித்து நம்பர் 1 டெஸ்ட் அணியானது தென் ஆப்பிரிக்கா. 2013க்குப் பிறகு எந்தவொரு சர்வதேச அணிக்கும் பயிற்சியாளராக கிரிஸ்டன் பணியாற்றவில்லை. ஆர்சிபி உள்ளிட்ட டி20 லீக் அணிகளுக்கு மட்டும் பயிற்சியாளராகப் பணியாற்றினார்.
இந்நிலையில் ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த கிறிஸ்டான், “ஒருநாள் கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணி நம்பர் 1 ஆக உள்ளது. டெஸ்ட் அணி போராடிக் கொண்டிருக்கிறது. அந்த அணிக்குப் பயிற்சியாளராக இருந்தால் நன்றாக இருக்கும். இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் தேர்வில் இருமுறை (2015 & 2019) கலந்துகொண்டுள்ளேன்.
எல்லா வகை கிரிக்கெட் போட்டிகளுக்கும் பயிற்சியாளராக இருக்க மாட்டேன் எனத் தெளிவாகக் கூறியுள்ளேன். வெவ்வேறு வகை கிரிக்கெட் போட்டிகளுக்கு ஏற்றாற்போல பயிற்சியாளர் பணிகளைப் பிரித்துக்கொண்டால் நான் அப்பொறுப்பை ஏற்றுக்கொள்ள எண்ணுவேன்.
இங்கிலாந்து டெஸ்ட் அணியின் பயிற்சியாளராக இருப்பது மரியாதைக்குரியது. இங்கிலாந்து அணியின் முதல் ஆறு பேட்டர்கள் பற்றிய தெளிவான புரிதல் யாரிடமும் இல்லை. அதை வைத்தே என்ன பிரச்னை என்பதைப் புரிந்துகொள்ளலாம்” என்று தெரிவித்தார்.
Win Big, Make Your Cricket Tales Now