
Former IPL Chairman Lalit Modi & Sushmita Sen Dating Each Other (Image Source: Google)
இன்று பெரும் வரவேற்பு பெற்றுள்ள ஐபிஎல் போட்டிகளை உருவாக்கி வளர்த்தவர்களில் முக்கியமானவர் தொழிலதிபரும், கிரிக்கெட் நிர்வாகியுமானவர் லலித் மோடி. பின்னர் இந்தப் போட்டி உள்பட பல்வேறு பண மோசடி மற்றும் ஊழல் காரணமாக வாழ்நாள் தடை விதிக்கப்பட்டநிலையில், லலித் மோடி லண்டன் தப்பிச் சென்றார்.
அதன்பிறகு இவர் குறித்து பெரிதாக எதுவும் செய்திகள் வெளியாகாத நிலையில், தற்போது சுஷ்மிதா சென்னுடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து, புதிய வாழ்க்கை துவங்கியுள்ளதாக அறிவித்துள்ளார்.
தாங்கள் இருவரும் டேட்டிங் மட்டுமே செய்துவருவதாகவும், விரைவில் திருமணம் நடக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் சார்தீனியா, மாலத்தீவு போன்ற தீவுகளுக்கு இருவரும் சுற்றுலா சென்றுவிட்டு தற்போது மீண்டும் லண்டனுக்கு திரும்பியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.