
Former Ireland Captain William Porterfield Retires From International Cricket (Image Source: Google)
அயர்லாந்து கிரிக்கெட் அணியின் சிறந்த கேப்டன்களில் ஒருவராகப்பார்க்கப்பட்டவர் வில்லியம் போர்ட்டர்ஃபீல்ட். இவர் அயர்லாந்து அணிக்காக 2006ஆம் ஆண்டு அறிமுகமானார்.
இதுவரை அயர்லாந்து அணிக்காக இவர் 3 டெஸ்ட், 148 ஒருநாள், 61 டி20 போட்டிகளில் விளையாடி 6ஆயிரத்திற்கும் உட்பட்ட ரன்களைக் குவித்துள்ளார். இதில் 11 சதங்களும், 23 அரைசதங்களும் அடங்கும்.
தற்போது 37 வயதாகும் வில்லியம் போர்ட்டர்ஃபீல்ட் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக இன்று அறிவித்தர்.