நியூ., முன்னாள் வீரர் கிறிஸ் கெய்ர்ன்ஸ் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி!
நியூசிலாந்து அணியின் முன்னாள் ஆல் ரவுண்டர் கிறிஸ் கெய்ர்ன்ஸ் தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆஸ்திரேலியாவிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நியூஸிலாந்து அணியின் மிகச்சிறந்த ஆல் ரவுண்டர், பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்து நிலைகளிலும் நியூசிலாந்து அணியில் ஆதிக்கம் செலுத்திய ஒரு வீரர் என்ற பெருமையைப் பெற்றவர் கிறிஸ் கெய்ர்ன்ஸ்.
இவர் 1989-2006 வரை நியூசிலாந்துக்காக 62 டெஸ்ட், 215 ஒரு நாள் சர்வதேச போட்டிகளில் விளையாடி, டெஸ்ட் கிரிக்கெட்டில் 3320 ரன்கள் மற்றும் 218 விக்கெட்டுகளும், ஒருநாள் போட்டிகளில் 4950 ரன்களையும், 201 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, அவர் ஸ்கை ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சிக்கு வர்ணனையும் செய்து கொண்டிருந்தார்.
Trending
இந்நிலையில், க்றிஸ் கெய்ர்ன்ஸ் தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக தெரிய வந்துள்ளது. இவர் தற்போது ஆஸ்திரேலியாவின் கான்பெர்ராவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்படுள்ளார். நியூசிலாந்து ஹெரால்ட் பத்திரிக்கையின் தகவலின் படி, கெய்ர்ன்ஸ் ஆர்டிக் டைசெக்சன் பாதிப்பில் சிக்கியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. உடலின் முக்கிய தமனியில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையடுத்து அவர் சிட்னியில் உள்ள ஒரு சிறப்பு மருத்துவமனைக்கு மாற்றப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் அவர் உடல்நிலை சரியில்லாமல் போனபிறகு பல அறுவை சிகிச்சைகள் செய்த போதிலும் அவரது உடல் எந்த முன்னேற்றமும் அடையவில்லை என்று தெரியவருகிறது.
Win Big, Make Your Cricket Tales Now