
Former Pakistan Pacer Mohammad Sami Claims He Has Bowled Two Deliveries Over 160 KPH (Image Source: Google)
சர்வதேச கிரிக்கெட்டில் இதுவரை வேகமாக பந்துவீசிய, பந்துவீச்சாளராக பாகிஸ்தானின் ஜாம்பவான் பௌலர் ஷோயிப் அக்தர் இருக்கிறார்.
161.3 கி.மீ வேகத்தில், அவர் வீசிய பந்துதான் அதிவேக பந்தாக இருக்கிறது. இதற்காக கின்னஸ் ரெக்கார்ட்டும் அக்தருக்கு கொடுக்கப்பட்டுள்ளது. தற்போதுவரை அந்த சாதனைக்கு இவர்தான் சொந்தக்காரராக இருக்கிறார்.
இந்நிலையில், அதே பாகிஸ்தான் அணியைச் சேர்ந்த முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியும், நான் வீசிய பந்துதான் அதிவேகமாக சென்றது எனக் கூறி புது சர்ச்சையைக் கிளப்பியுள்ளார்.