
தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டனாக இருந்தவர் ஃபாஃப் டூ பிளெசிஸ். இவர் தென் ஆப்பிரிக்க அணிக்காக 69 டெஸ்ட், 143 ஒருநாள், 50 டி20 போட்டிகளில் விளையாடி 16 ஆயிரத்திற்கு அதிகமான ரன்களைச் சேர்த்துள்ளார். அதன்பின் அவருக்கு போதிய வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் தற்போது லீக் டி20 போட்டிகளில் விளையாடி வருகிறார்.
இந்நிலையில் ஃபாஃப் டூ பிளெசிஸ் ‘ஃபாஃப் த்ரோக் ஃபையர்’ என்ற சுயசரிதை புத்தக்கத்தை எழுதியுள்ளார். இந்த புத்தகம் குறித்து பேட்டி ஒன்றில் பேசும் போது டுப்ளசிஸ் கடுமையான விமர்சனத்தை வார்னர் மீது வைத்திருக்கிறார்.
அதாவது கடந்த 2018 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவுக்கு ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது கிரிக்கெட் உலகிலே பெரிய சர்ச்சை ஒன்று உருவானது. அந்தத் தொடரில் கேப் டவுனில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்டில் ஆஸ்திரேலிய வீரர்கள் பந்தை உப்பு காகிதத்தை வைத்து சேதப்படுத்தினர்.