
Four Members Of Afghanistan U19 World Cup Squad Head To UK, Urged To Travel Back Home (Image Source: Google)
வெஸ்ட் இண்டீசில் அண்டர் 19 வீரர்களுக்கான 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. இதில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. ஆஃப்கானிஸ்தான் 4ஆவது இடத்தை பிடித்தது.
இந்தத் தொடரில் விளையாடுவதற்காக பயிற்சியாளரான முன்னாள் வீரர் ரயீஸ் அகமதுஜாய் தலைமையில் ஆஃப்கானிஸ்தான் அணி சென்றிருந்தது.
தொடர் முடிந்தபிறகு நான்கு பேர் ஆப்கானிஸ்தான் திரும்பாமல் இங்கிலாந்து சென்றனர். பொதுவாக நீண்ட தூர பயணத்தின்போது மற்றொரு நாடு வழியாக செல்வார்கள். இதில் இந்த நான்கு வீரர்களுக்கான டிரான்சிட் விசா 8ஆம் தேதியுடன் முடிவடைந்தது.