
France Cricketer Gustav McKeon Breaks Multiple Records With Back-To-Back Tons (Image Source: Google)
டி20 உலகக் கோப்பைப் போட்டிக்கான தகுதிச்சுற்றில் நேற்று நடைபெற்ற 12ஆவது லீக் ஆட்டத்தில் ஃபிரான்ஸ் - நார்வே அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற ஃபிரான்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து களமிறங்கியது.
அதன்படி களமிறங்கிய ஃபிரான்ஸ் அணியில் கஸ்டவ் மெக்கியான் அதிரடியான ஆட்டத்தை மிரட்ட, மறுமுனையில் களமிறங்கிய வீரர்கள் வழக்கம்போல சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து நடையைக் கட்டினர்.
ஆனாலும் மறுமுனையில் தொடர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கஸ்டவ் மெக்கியான் 53 பந்துகளில் 5 பவுண்டரி, 8 சிக்சர்களை பறக்கவிட்டதுடன், சதமடித்து அசத்தினார். சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இவரது இரண்டாவது சதம் இதுவாகும்.