
அக்டோபர் இறுதியில் ஆஸ்திரேலியாவில் துவங்கவுள்ள டி20 உலகக் கோப்பைக்கு அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகிறது. இந்த டி20 உலகக் கோப்பைக்கான அணியை, அனைத்து கிரிக்கெட் வாரியங்களும் செப்டம்பர் 15ஆம் தேதி மாலைக்குள் கொடுக்க வேண்டும். சமீபத்தில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலிய அணி தங்களின் வீரர்கள் பட்டியலை வெளியிட்டது.
தற்போது இங்கிலாந்து அணி தங்களது நாட்டு வீரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் அதிரடி வீரர் ஜேசன் ராயின் பெயர் இடம்பெறவில்லை. இவர் கடந்த டி20 உலகக் கோப்பைக்கு பிறகு 11 டி20 போட்டிகளில் 18.72 சராசரியுடன் 206 ரன்களை மட்டுமே சேர்த்துள்ளார். இதனால்தான், நீக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இவருக்கு மாற்றாக, இந்தாண்டு துவக்கத்தில் இங்கிலாந்து அணிக்கு அறிமுகமாக பிளிப் சால்ட் சேர்க்கப்பட்டுள்ளார். கடந்த டி20 உலகக் கோப்பையின்போது இங்கிலாந்து அணிக்காக அதிக விக்கெட்களை கைப்பற்றிய பௌலராக திகழ்ந்த தைமல் மில்ஸ், அதன்பிறகு காயம் காரணமாக சில போட்டிகளில் பங்கேற்காத நிலையில் தற்போது ரிசர்வ் வீரராக இடம்பெற்றுள்ளார். மேலும், லியம் லிவிங்ஸ்டன் மற்றும் ரிச்சர்ட் க்ளீசன் ஆகியோரும் ரிசர்வ் வீரராக இடம்பெற்றுள்ளனர்.