
ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும் ஐபிஎல் திருவிழாவின் 17ஆவது சீசன் இன்னும் சில தினங்களில் தொடங்கவுள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் எந்த அணி சாம்பியன் பட்டத்தை வென்று சாதிக்கும் என்ற எதிர்பார்ப்பும், ஆவலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அனைத்து அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
நடப்பு ஐபிஎல் தொடரில் ஹர்திக் பாண்டியா தலைமையில் களமிறங்கும் மும்பை இந்தியன்ஸ் அணியின் மீதான எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இந்நிலையில் நடப்பு ஐபிஎல் தொடருக்கான மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம்பிடித்திருந்த வேகப்பந்து வீச்சாளர் ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப் காயம் காரணமாக தொடரிலிருந்து விலகியுள்ளார். இதையடுத்து அவருக்கு மாற்றாக இங்கிலாந்தைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் லூக் வுட் மும்பை அணியில் சேர்க்கப்பட்டார்.
இந்நிலையில் நடப்பு ஐபிஎல் சீசனிலிருந்து விலகியதற்கான காரணத்தை ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப் கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “துரதிர்ஷ்டவசமாக, கடந்த வாரம் பயிற்சியின் போது ஒரு எனக்கு ஒரு விபத்து ஏற்பட்டது. அந்த விபத்தில் எனது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இது யாருடைய தவறும் அல்ல, இது மிகவும் துரதிர்ஷ்டவசமான சம்பவம்.