
Fresh and familiar faces alike in Bangladesh's T20 World Cup squad (Image Source: Google)
ஏழாவது சீசன் டி20 உலகக்கோப்பை தொடர் அடுத்த மாதம் 17ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இத்தொடருக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன.
அதன்படி ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இந்தியா, பாகிஸ்தான் அணிகள் இத்தொடருக்கான அணியை அறிவித்துள்ளன. மேலும் நாளைக்குள் அனைத்து அணிகளும் தங்கள் வீரர்களை அறிவிக்க வேண்டுமென ஐசிசி கெடு விதித்துள்ளது.
இந்நிலையில் டி20 உலகக்கோப்பை தொடருக்கான 15பேர் அடங்கிய வங்கதேச அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மஹ்மதுல்லா தலைமையிலான வங்கதேச அணியில் முஷ்பிக்கூர் ரஹீம், முஸ்தபிசூர் ரஹ்மான், ஷகிப் அல் ஹசன் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.