Advertisement

ஐபிஎல் 2022: கம்மின்ஸிடம் இதனை நாங்கள் எதிர்பார்க்கவில்லை - ரோஹித் சர்மா!

நான் பேட் கம்மின்ஸ்ஸிடம் இப்படி ஒரு ஆட்டத்தை எதிர்பார்க்கவில்லை என்று மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறியுள்ளார்.

Advertisement
 Frustrated Rohit Sharma ahead of presentation ceremony after Pat Cummins’ onslaught
Frustrated Rohit Sharma ahead of presentation ceremony after Pat Cummins’ onslaught (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Apr 07, 2022 • 10:27 AM

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வென்றது. இப்போட்டியில் 162 ரன்களை இலக்காகக் கொண்டு விளையாடிய கொல்கத்தா அணியில், வெங்கடேஷ் ஐயா் 6 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 50 ரன்களும், பேட் கம்மின்ஸ் 4 பவுண்டரிகள், 6 சிக்ஸா்களுடன் 56 ரன்களும் விளாசி வெற்றி பெறச் செய்தனா். 

Bharathi Kannan
By Bharathi Kannan
April 07, 2022 • 10:27 AM

கொல்கத்தா  அணிக்கு 4 ஆட்டங்களில் இது 3ஆவது வெற்றி; 3 ஆட்டங்களில் விளையாடியிருக்கும் மும்பைக்கு இது ‘ஹாட்ரிக்’ தோல்வி.

Trending

இந்த நிலையில் போட்டி முடிந்த பின் பேசிய மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் ஷர்மா, "நான் பேட் கம்மின்ஸ்ஸிடம் இப்படி ஒரு ஆட்டத்தை எதிர்பார்க்கவில்லை. முதல் இன்னிங்ஸில் நாங்கள் சரியாக தொடங்கவில்லை. ஆனால் கடைசி 4-5 ஓவர்களில் 70 ரன்களை எடுத்தது எங்கள் பேட்ஸ்மேன்களின் பெரும் முயற்சி தான்.

பவுலிங் செய்யும் போது எங்களின் திட்டப்படி நாங்கள் செயல்பட முடியவில்லை. நாங்கள் துவங்கும்போது பிட்ச் சற்று மெதுவாக இருந்தது. ஆனால் ஆட்டம் செல்ல செல்ல, இந்த பிட்ச் விளையாடுவதற்கு சிறப்பாக அமைந்தது. எங்களுக்கு வெற்றிபெற தேவையான ரன்கள் இருந்தது. 

இறுதியில் 15ஆவது ஓவர் வரை போட்டியின் வெற்றி எங்கள் பக்கம்தான் இருந்தது. ஏற்கனவே அவர்களுக்கு ஐந்து விக்கெட்டுகள் விழுந்திருந்ததால், தேவையான ரன்களும் எங்களிடம் இருந்ததாகவே நினைத்தேன். சுனில் நரைன் தான் நன்றாக விளையாடக் கூடியவர் என்று எதிர்பார்த்தோம். 

ஆனால் பேட் கம்மின்ஸ் அவர்களுக்கு வெற்றியை தேடி கொடுத்துவிட்டார். இதை ஒத்துக்கொள்வதற்கு சிறிது கடினமாக இருக்கிறது. நாங்கள் இன்னும் நிறைய முயற்சிகளை கொடுக்க வேண்டும். நாங்கள் எப்போதும் இந்த நிலையில் இருக்க விரும்பவில்லை" என்று தெரிவித்தார்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement