
ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரின் 16ஆவது சீசனுக்கான மினி வீரர்கள் ஏலம் கொச்சியில் நேற்று நடைபெற்றது. இந்த ஏலத்தில் அதிகபட்சமாக இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டரான சாம் கரணை ரூ. ரூ.18.50 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணி ஏலம் எடுத்தது. இதன் மூலம் மினி ஏலத்தில் அதிக தொகைக்கு வாங்கப்பட்ட வீரர் என்ற சாதனையை சாம் கரண் படைத்துள்ளார் .
ஆஸ்திரேலியாவின் ஆல்ரவுண்டரான கேமரூன் கிரீனை மும்பை இந்தியன்ஸ் ரூ.17.50 கோடிக்கு வாங்கியது. இதன் மூலம் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட 2ஆவது வீரர் எனும் பெருமையை கேமரூன் கிரீன் பெற்றுள்ளார். டெல்லி அணி ரூ.15 கோடி வரை கேமரூன் கிரீனை ஏலம் எடுக்க மல்லுக்கட்டியது. ஆனால் மும்பைஇந்தியன்ஸ் அந்த தொகையைவிட அதிக விலைக்கு ஏலம் எடுத்தது.
அதேபோல் இங்கிலாந்து அணியின் மற்றொரு ஆல்ரவுண்டரான பென் ஸ்டோக்ஸை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரூ.16.25 கோடிக்கு ஏலம்எடுத்தது. ஐபிஎல் வரலாற்றில் சென்னை அணி இவ்வளவு பெரியதொகைக்கு வீரரை ஒரு ஏலம் எடுப்பது இதுவே முதன்முறை. இதற்கு முன்னர் தீபக் சஹாரை அந்த அணி ரூ.14 கோடிக்கு ஏலம் எடுத்திருந்தது.