-mdl.jpg)
இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் டெஸ்ட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதல் இரு போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி வென்ற நிலையில், 3ஆவது போட்டியில் இங்கிலாந்து அணி வென்று பதிலடி கொடுத்துள்ளது. இதனால் ஆஷஸ் டெஸ்ட் 2-1 என்ற கணக்கில் உள்ளது.
இதுவரை 3 போட்டிகள் மட்டுமே முடிவடைந்துள்ள நிலையில், சர்ச்சைகளுக்கும் பஞ்சமில்லாமல் உள்ளது. ஒரு பக்கம் பேர்ஸ்டோவ் ஸ்டம்பிங் சர்ச்சை இரு நாட்டு பிரதமர்கள் வரை சென்றது. இதனைத் தொடர்ந்து அலெக்ஸ் கேரி முடிவெட்டியதற்கு பணம் கொடுக்கவில்லை என்று இங்கிலாந்து ஊடகங்கள் புதிய சர்ச்சையை உருவாக்கினர்.
இதுமட்டுமல்லாமல் களத்திலேயே 100ஆவது டெஸ்டில் ஆடிய ஸ்டீவ் ஸ்மித்தை பேர்ஸ்டோவ் கிண்டல் செய்த விதம், ஸ்டீவ் ஸ்மித்தை இங்கிலாந்து ரசிகர்கள் வம்புக்கு இழுத்தது, லார்ட்ஸ் மைதானத்தில் எம்சிசி உறுப்பினர்கள் கவாஜாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டது என்று அடுத்தடுத்து புதிய சர்ச்சைகள் உருவாகியது.