Advertisement

பாகிஸ்தான் அணியின் புதிய முயற்சிக்கு கண்டனம் தெரிவித்த அஃப்ரிடி!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ஏற்கனவே அந்த பணியில் இருந்து நீக்கப்பட்ட மிக்கி ஆர்தர் மீண்டும் நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Advertisement
Furious Shahid Afridi questions PCB's logic amid reports on hiring Mickey Arthur as 'online' coach
Furious Shahid Afridi questions PCB's logic amid reports on hiring Mickey Arthur as 'online' coach (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Jan 31, 2023 • 10:56 AM

பாபர் ஆசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி சமீப காலங்களில் டெஸ்ட், ஒருநாள் போட்டிகள் என அடுத்தடுத்த தோல்விகளைச் சந்தித்து விமர்சனங்களுக்கு உள்ளாகியது. இந்நிலையில், நடப்பாண்டு ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெறவுள்ளதால் அதற்கான முயற்சிகளில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஈடுபட்டுள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan
January 31, 2023 • 10:56 AM

அதன்படி உலக வரலாற்றிலே யாரும் செய்யாத வகையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் புதிய முயற்சி ஒன்றை எடுக்க உள்ளது. அதாவது மிக்கி ஆர்தர் தற்போது இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட்டில் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார். அவர் அந்த பதவியை விட்டு வர முடியாது.

Trending

இதனால் பாகிஸ்தான் அணியை ஆன்லைன் மூலம் வழிநடத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த முறைக்கு அவர் ஒப்புக்கொண்டால், உலகத்திலேயே முதல் முறையாக சர்வதேச அணிக்கு ஆன்லைன் மூலம் பயிற்சியாளராக செயல்பட உள்ள முதல் நபர் என்ற பெருமையை மிக்கி ஆர்த்தர் பெற உள்ளார். 

இந்த செய்திக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள அஃப்ரிடி, “பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் எந்த வகையில் பயிற்சியாளர்களை நியமிக்க போகிறார்கள் என்று சத்தியமாக எனக்கு தெரியவில்லை. ஆன்லைன் மூலம் பாகிஸ்தான அணியை வழி நடத்தும் முறை யோசிப்பதற்கே அப்பாற்பட்ட விஷயமாக இருக்கிறது. 

அப்படி ஆன்லைன் மூலம் பயிற்சி கொடுக்க எதற்கு வெளிநாட்டு நபர் தேவைப்படுகிறார் என்று எனக்கு புரியவில்லை. பாகிஸ்தான் நாட்டிலே பல சிறந்த பயிற்சியாளர்கள் இருக்கிறார்கள். எந்த அரசியல் பின்னணியும் இல்லாத நபர் பயிற்சியாளராக வரவேண்டும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நினைப்பதில் எந்த தவறும் இல்லை.

இருப்பினும் அரசியலை கிரிக்கெட் உடன் இணைத்து பார்க்க வேண்டாம். நல்ல பயிற்சியாளர் மட்டுமே தேவை என்பதை கருத்தில் கொண்டு அவருடைய அரசியல் பின்னணி குறித்து எல்லாம் பார்க்க கூடாது .உலகக் கோப்பைக்கு சிறந்த அணியை உருவாக்கும் நபரை தான் நாம் பயிற்சியாளராக நியமிக்க வேண்டும்” என்று அஃப்ரிடி கூறியுள்ளார்.

இதனிடையே பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் நஜாம் சேதி கூறுகையில், “மிக்கி ஆர்த்தரை பயிற்சியாளராக கொண்டுவர தம் அனைத்து நடவடிக்கையும் எடுத்து வருகிறேன். அவர் பயிற்சியாளராக திரும்பும் செய்தியை நான் விரைவில் உங்களுடன் அறிவிப்பேன். அவருக்கு எவ்வளவு சம்பளம் என்பது குறித்து மட்டுமே இப்போது பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது” என்று தெரிவித்துள்ளார்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement