Advertisement

கிரிக்கெட்டில் ஒழுக்கம் பேசுபவர்கள் இப்போது எங்கே சென்றார்கள்? - கவுதம் கம்பீர்!

ஆஸ்திரேலியா செய்தது சரியா? கிரிக்கெட்டில் ஒழுக்கம் பேசுபவர்கள் இப்போது எங்கே சென்றார்கள்? என்று பேர்ஸ்ஸ்டோவ் விக்கெட்டிற்கு முன்னாள் வீரர்  கவுதம் கம்பீர் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.

Advertisement
Gambhir lashes out at 'sledgers' for 'spirit of the game' logic after Bairstow controversy
Gambhir lashes out at 'sledgers' for 'spirit of the game' logic after Bairstow controversy (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Jul 04, 2023 • 10:42 AM

இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகள் மோதிய டெஸ்ட் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. போட்டியில் இங்கிலாந்து அணியை 43 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றது. ஏற்கனவே எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியை வென்றது. இப்போது இரண்டாவது டெஸ்ட் போட்டியையும் வெற்றி பெற்றதால், ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என்கிற கணக்கில் வலுவான முன்னிலையில் இருக்கிறது ஆஸ்திரேலிய அணி.

Bharathi Kannan
By Bharathi Kannan
July 04, 2023 • 10:42 AM

ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் போட்டிகள் என்றாலே அதில் பரபரப்பு மற்றும் சர்ச்சைகளுக்கு துளியும் பஞ்சம் இல்லாமல் இருக்கும். அந்த வகையில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சில சச்சரவுகள் ஏற்பட்டன. முதலாவதாக மிச்சல் ஸ்டார்க் எடுத்த கேட்ச் முறையானது அல்ல. ஆகையால் அவுட் இல்லை என்று மூன்றாம் நடுவரால் முடிவுகள் கொடுக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இரண்டாவதாக, ஜானி பேர்ஸ்டோவ் சர்ச்சையான முறையில் ரன் அவுட் செய்யப்பட்டது தற்போது பரவலாக பேசப்பட்டு வருகிறது.

Trending

இந்த விவகாரம் போட்டியில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. ஆஸ்திரேலியா அணி வெற்றி பெறுவதற்கு முக்கிய விக்கெட்டாகவும் இருந்தது. இதனால் ஆஸ்திரேலியா அணி சூழ்ச்சி செய்து வெற்றி பெற்றுவிட்டார்கள் என்கிற குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டு வருகின்றன. மற்றும் சிலர் இதன் மூலம் போட்டிகளின் ஸ்பிரிட் முற்றிலுமாக குறைந்து வருகிறது என்றும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் ஆஸ்திரேலியா முன்னாள் வீரர்களை கடுமையாக சாடியுள்ளார். “இந்திய அணி விளையாடும் போட்டியில் ஏதேனும் நடந்துவிட்டால் உடனடியாக கிரிக்கெட்டின் ஸ்பிரிட் குறைந்து விடுகிறது என்று கதறுபவர்களே, இப்போது எங்கே சென்றீர்கள்? இந்தியா விளையாடும் போட்டி என்றால் ஒரு நியாயம், அதுவே ஆஸ்திரேலியா செய்திருந்தால் ஒரு நியாயமா?” என்று சரமாரியாக கேள்விகளை எழுப்பி குற்றச்சாட்டை முன் வைத்தார்.

அஸ்வின் மான்கட் செய்யும்போது, பலரும் சர்ச்சையான கருத்துக்களை கூறிவந்தார். ஆனால் அவரோ விதிமுறைக்கு உட்பட்டு செயல்பட்டார். ஆனால், முன்னாள் ஆஸி., வீரர்கள் சிலர் இதற்கு, வீரர்களின் இதுபோன்ற தரக்குறைவான செயல்களால் போட்டியின் ஸ்பிரிட் குறைந்துவிடுகிறது என்று பேசினார். இப்போது ஆஸ்திரேலிய வீரர்களும் அப்படியொரு செயலை செய்துள்ளனர். ஆனால், இப்போது இவர்களை பற்றி பேசுவதற்கு எவருமே வரவில்லை. 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement