2023 முதல் மகளிர் ஐபிஎல் - கங்குலி!
2023ஆம் ஆண்டு முதல் மகளிர் ஐபிஎல் தொடங்க வாய்ப்புள்ளது என்று பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
மகளிருக்கான ஐபிஎல் போட்டி இன்னும் தொடங்காத நிலையில் பெங்கால் கிரிக்கெட் சங்கம், மகளிர் டி20 போட்டியை இம்மாதம் நடத்தவுள்ளது. பெங்கால் மகளிர் டி20 பிளாஸ்ட் என்கிற பெயரில் மகளிர் டி20 போட்டி மேற்கு வங்கத்தில் நடைபெறவுள்ளது.
இந்தப் போட்டிக்கான 90 வீராங்கனைகள் சமீபத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். இதையடுத்து மகளிர் ஐபிஎல் போட்டியை பிசிசிஐ தொடங்காதது ஏன் எனப் பலரும் கேள்வி எழுப்பியுள்ளார்கள்.
Trending
ஐபிஎல் போட்டியின் போது நடைபெறும் மகளிர் டி20 சேலஞ்ச் ஆட்டங்கள் பற்றி கங்குலி கூறுகையில்,“மகளிர் டி20 சேலஞ்ச் ஆட்டங்கள் இந்த வருட மே மாதம் நடைபெறும். வீராங்கனைகளின் எண்ணிக்கை அதிகமாகும்போது வருங்காலத்தில் மகளிர் ஐபிஎல் போட்டி நடைபெறும். ஐபிஎல் பிளே ஆஃப்பின்போது மகளிர் டி20 சேலஞ்ச் ஆட்டங்கள் நடைபெறும் என்றார்.
மேலும் முழு மகளிர் ஐபிஎல் போட்டியை நடத்துவதற்கான பணிகளில் இறங்கியுள்ளோம். அது நிச்சயம் நடைபெறும். மகளிர் ஐபிஎல் போட்டியை அடுத்த வருடம் தொடங்குவது சரியாக இருக்கும். அது நிச்சயம் ஐபிஎல் போட்டியைப் போல பெரிய வெற்றியை அடையும்” என்று தெரிவித்தார்.
Win Big, Make Your Cricket Tales Now