
தற்பொழுது இங்கிலாந்து லண்டன் ஓவல் மைதானத்தில் இந்திய ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் இரண்டாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி பற்றி பல விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இந்தப் போட்டியில் இந்திய சுழற் பந்துவீச்சாளர் அஸ்வின் விளையாட வாய்ப்பு தரப்படவில்லை. ஆடுகளம் வேகபந்துவீச்சுக்கு சாதகமான புல் தரையாக இருக்கிறது என்று சொல்லப்பட்டது. இன்றைய நிலையில் அஸ்வின் டெஸ்ட் பந்துவீச்சு தரவரிசையில் முதல் இடத்திலும், டெஸ்ட் ஆல்ரவுண்டர்கள் இடத்தில் இரண்டாவது இடத்திலும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால் அஸ்வினை அணிக்கு எடுக்காதது பெரிய விமர்சனமாக இந்திய அணியின் பேட்டிங் சரிவுக்கு பின்னால் பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஆஸ்திரேலிய அணியின் ஆப் ஸ்பின்னர் நாதன் லயன் சிறப்பாக விளையாடி வந்த ஜடேஜாவின் விக்கட்டை வீழ்த்தியதும் இந்த விமர்சனம் சூடுபிடிக்க ஆரம்பித்திருக்கிறது.