
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய மகளிர் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலிய மகளிர் அணி வெற்றிபெற்று தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது.
இதில் நியூசிலாந்து மகளிர் மற்றும் ஆஸ்திரேலிய மகளிர் அணிகளுக்கு இடையேயன இரண்டாவது டி20 போட்டியானது மவுண்ட் மவுங்கானுயில் உள்ள ஈடன் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் ஏற்க்கெனவே ஆஸ்திரேலிய மகளிர் அணி முதல் போட்டியில் வெற்றிபெற்றதன் காரணமாக இப்போட்டியிலும் வெற்றிபெற்று தொடரைக் கைப்பற்றும் முயற்சியில் இறங்கியுள்ளது.
அதேசமயம் முதல் போட்டியில் தோல்வியைத் தழுவிய நியூசிலாந்து மகளிர் அணி இப்போட்டியில் வெற்றிபெற்று தொடரை சமன்செய்யும் முயற்சியில் விளையாடவுள்ளது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன. இதற்காக இரு அணி வீராங்கனைகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. இந்நிலையில் இப்போட்டிக்கு முன்னதாக ஆஸ்திரேலிய அணி பின்னடவை சந்திந்தித்துள்ளது.