
16ஆவது சீசன் ஐபிஎல் தொடரின் சாம்பியன் தீர்மானிக்கும் இறுதி போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதின. குஜராத்தின் அஹமதாபாத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த குஜாராத் அணிக்கு சாய் சுதர்சன் 96 ரன்களும், விர்திமான் சஹா 54 ரன்களும் எடுத்து கொடுத்ததன் மூலம், 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்த சென்னை அணி 214 ரன்கள் குவித்தது. இதன்பின் மழை குறுக்கிட்டு போட்டியை இரண்டு மணி நேரத்திற்கும் மேல் தாமதப்படுத்தியதால், சென்னை அணிக்கு வெற்றி இலக்கு 171ஆக குறைக்கப்பட்டு, போட்டியின் ஓவரும் 15ஆக குறைக்கப்பட்டது.
இதனையடுத்து 90 பந்துகளில் 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி களமிறங்கிய சென்னை அணிக்கு கான்வே 47 ரன்களும், கெய்க்வாட் 26 ரன்களும் எடுத்து நல்ல துவக்கம் கொடுத்தனர். அடுத்தடுத்து களமிறங்கிய ரஹானே (27), ராயூடு (19) என ஒவ்வொரு வீரர்களும் தங்களது பங்களிப்பை சரியாக செய்து கொடுத்ததாலும், குஜராத் வீரர்களும் விட்டுகொடுக்காமல் கடுமையாக போராடியதாலும் சென்னை அணியின் வெற்றிக்கு கடைசி ஒரு ஓவரில் 13 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையை சென்னை அணி சந்தித்தது.