
Gautam Gambhir Hails MS Dhoni For Promoting Robin Uthappa in Batting Order After CSK Make Final (Image Source: Google)
ராபின் உத்தப்பாவின் திறமை பற்றி கவுதம் கம்பீர் அறிவார், ஏனெனில் கொல்கத்தா அணிக்கு கம்பீர் கேப்டன்சியில் ராபின் உத்தப்பா விளையாடி அதிரடி காட்டியுள்ளார். விக்கெட் கீப்பிங்கும் செய்துள்ளார்.
ஐபிஎல் பிளே ஆஃப் சுற்றுகளில் ரெய்னாவின் சாதனைகளை ரசிகர்கள் புட்டுப்புட்டு வைத்து பேசி தோனியிடம் மன்றாடினர் ரெய்னாவை அணியில் சேர்ப்பதற்காக. ஆனால் தோனி, ராபின் உத்தப்பாவுக்கு ஆதரவு அளித்தார்.
இந்நிலையில் சுரேஷ் ரெய்னாவை விடுத்து ராபின் உத்தப்பாவை ஆதரித்து பிளே ஆஃப் சுற்றில் சேர்த்தது குறித்து சிஎஸ்கே கேப்டன் தோனிக்கு கம்பீர் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.