-mdl.jpg)
உலகக் கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாக கணிக்கப்பட்ட பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சு, பேட்டிங் வலுவாக உள்ள நிலையில், பேட்டிங் வரிசை கவலை அளிக்கும் விதமாகவே இருக்கிறது. அந்த அணியின் தொடக்க வீரராக களம் இறங்கும் பாபர் ஆசாம், முகமது ரிஸ்வான் ஆகியோர் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வந்த நிலையில், அந்த அணியின் மிடில் ஆர்டர் பேட்டிங் சொதப்பல் பெரிதாக தெரியவில்லை.
ஆனால், தற்போதைய டி20 உலகக் கோப்பையில் இந்தியா, ஜிம்பாப்வே அணிகளுக்கு எதிராக பாபர் ஆசம் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் அந்த அணி தோல்வியை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. பாகிஸ்தான் அணி தற்போது அரையிறுதிக்கு முன்னேறுவதில் சிக்கில் நீடிக்கிறது.
கடந்த போட்டியில் நெதர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் ரிஸ்வான் உடன் ஃபகர் ஸமான் தொடக்க வீரராக களம் இறங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. இருந்தாலும் பாபர் ஆசாம்தான் தொடக்க வீரராக களம் இறங்கினார். பின்னர் களம் இறங்கிய ஃபகர் ஸமான் 16 பந்தில் 20 ரன்கள் சேர்த்தார்.