அதிக நோ-பால்களை வீசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது - சுனில் கவாஸ்கர்!
இலங்கைக்கு எதிரானஇரண்டாவது போட்டியில் இப்படி தொடர்ந்து நோ-பால்களை வீசியதற்கு கவாஸ்கர் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
இந்தியா வந்துள்ள இலங்கை அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.இதில், முதல் போட்டியில் இந்திய அணி கடைசிவரை போராடி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற நிலையில், அடுத்து இரண்டாவது போட்டி புனேவில் துவங்கி நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
முதலில் களமிறங்கிய இந்திய அணியில் பதும் நிஷங்கா 33 , குஷல் மெண்டிஸ் 52, அசலங்கா 37, ஷனகா 56 ஆகியோர் சிறப்பாக விளையாடியதால், இலங்கை அணி 20 ஓவர்களில் 206/6 ரன்களை குவித்தது. அர்ஷ்தீப் சிங் 5 நோ-பால்களை வீசி சொதப்பினார். அதேபோல் ஷிவம் மாவி, உம்ரான் மாலிக் இருவரும் தலா ஒரு நோ-பால்களை வீசினார்கள்.
Trending
இலக்கை துரத்திக் களமிறங்கிய இந்திய அணியில் இஷான் கிஷன் 2, ஷுப்மன் கில் 5, ராகுல் திரிபாதி 5, ஹார்திக் பாண்டியா 12, தீபக் ஹூடா 9 ஆகியோர் படுமோசமாக சொதப்பி நடையைக் கட்டினார்கள். அடுத்து சூர்யகுமார் யாதவ் 51, அக்சர் படேல் 65, ஷிவம் மாவி 26 ஆகியோர் கடைசிவரை வெற்றிக்காக போராடியும், இந்திய அணி 20 ஓவர்களில் 190/8 ரன்களை மட்டும் சேர்த்து, 16 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. தற்போது இரு அணிகளும் 1-1 என சமநிலையில் இருக்கிறது. கடைசிப் போட்டி நாளை நடைபெறவுள்ளது.
இப்போட்டியில் இந்திய அணி தோற்க முக்கிய காரணம் நோ-பால்கள்தான். அர்ஷ்தீப் சிங் 5 நோ-பால்களையும், ஷிவம் மாவி மற்றும் உம்ரான் மாலிக் ஆகியோர் தலா ஒரு நோ-பால்களை வீசி சொதப்பினார்கள். இதன்மூலம், ஒரு டி20 போட்டியில் அதிக நோ-பால்களை வீசிய அணி என்ற மோசமான சாதனையை இந்திய அணி படைத்துள்ளது. இதற்குமுன், அயர்லாந்து அணி 5 நோ-பால்களை வீசி முதலிடத்தில் இருந்தது.
மேலும், அர்ஷ்தீப் சிங் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இதுவரை 14 நோ-பால்களை வீசி, அதிக நோ-பால்களை வீசிய பௌலர் என்ற மோசமான சாதனையை படைத்துள்ளார்.இந்நிலையில், இரண்டாவது போட்டியில் இப்படி தொடர்ந்து நோ-பால்களை வீசியதற்கு கவாஸ்கர் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “சர்வதேச வீரராக இருந்துகொண்டு, நீங்கள் அதிக நோ-பால்களை வீசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. இன்றைய நாள் எங்களுக்கானது அல்ல என இப்போட்டி முடிந்தப் பிறகு இந்திய பௌலர்கள் கூறுவார்கள். அப்படிமட்டும் சொல்லாதீர்கள். நோ-பால்களை வீசாமல் இருப்பது, நீங்கள் மட்டும்தான் தடுத்து நிறுத்த முடியும். உங்களால், அதை ஏன் செய்ய முடியவில்லை. உங்களை தவிர கேப்டனால்கூட, நீங்கள் நோ-பால் வீசுவதை தடுக்க முடியாது” எனக் கூறினார்.
Win Big, Make Your Cricket Tales Now