டி20 உலகக்கோப்பை அணியில் அஸ்வின் சேர்க்கப்பட வேண்டும் - சுனில் கவாஸ்கர்!
டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் ரவிச்சந்திரன் அஷ்வினை கண்டிப்பாக எடுத்தே தீர வேண்டும் என்று சுனில் கவாஸ்கர் வலியுறுத்தியுள்ளார்.

இந்த ஆண்டின் இறுதியில் ஆஸ்திரேலியாவில் டி20 உலக கோப்பை தொடர் நடக்கவுள்ளது. டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பிடிக்க, ஐபிஎல் 15வது சீசனை சில வீரர்கள் அருமையாக பயன்படுத்திக்கொண்டனர்.
உம்ரான் மாலிக், அர்ஷ்தீப் சிங், மோசின் கான் போன்ற இளம் ஃபாஸ்ட் பவுலர்கள், ராகுல் திரிபாதி, தினேஷ் கார்த்திக் ஆகிய பேட்ஸ்மேன்கள் ஆகியோருடன் ஹர்திக் பாண்டியா, அஷ்வின் ஆகிய சீனியர் வீரர்களும் அபாரமாக விளையாடினர்.
இந்திய வெள்ளைப்பந்து அணிகளில் இடத்தை இழந்துவிட்ட அஸ்வின், ஐபிஎல்லில் பவுலிங் மட்டுமல்லாது பேட்டிங்கிலும் அபாரமாக செயல்பட்டு, தேர்வாளர்களுக்கு நெருக்கடியளிக்கிறார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஆடிவரும் ரவிச்சந்திரன் அஷ்வின், 13 போட்டிகளில் 11 விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன், 10 இன்னிங்ஸ்களில் 30.50 என்ற சராசரி, 146.40 என்ற ஸ்டிரைக் ரேட்டுடன் 183 ரன்கள் அடித்துள்ளார்.
Trending
3ஆம் வரிசை, 5ஆம் வரிசை, 7ஆம் வரிசை என எந்தவரிசையில் இறக்கிவிட்டாலும் அபாரமாக பேட்டிங் ஆடி அசத்தினார் அஷ்வின். தன்னால் எந்த பேட்டிங் ஆர்டரிலும் இறங்கி சிறப்பாக ஆடமுடியும் என்று நிரூபித்துள்ளார். இந்நிலையில், டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் அவரை கண்டிப்பாக எடுக்க வேண்டும் என்று சுனில் கவாஸ்கர் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து கருத்து கூறிய சுனில் கவாஸ்கர், “எந்த பேட்டிங் ஆர்டரிலும் தன்னால் பேட்டிங் ஆட முடியும் என்பதை காட்ட நினைத்தார் அஷ்வின். அவரது கிரிக்கெட் கெரியரை கிளப் கிரிக்கெட்டில் தொடக்க வீரராகத்தான் ஆரம்பித்தார். இப்போது உலகின் தலைசிறந்த ஸ்பின்னர்களில் ஒருவராக திகழ்கிறார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் 5 சதங்கள் அடித்த அஷ்வினுக்கு, தனக்கு பேட்டிங் ஆட வரும் என்பது நன்றாக தெரியும். டி20 கிரிக்கெட்டிலும் எந்த பேட்டிங் ஆர்டரிலும் பேட்டிங் ஆடமுடியும் என்பதை நிரூபித்துள்ளார். அவரை ஆஸ்திரேலியாவில் நடக்கும் டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் எடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now