
Gavaskar identifies 24-year-old batter as 'fabulous talent' (Image Source: Google)
நியூசிலாந்துக்கு எதிரான டி20 மற்றும் டெஸ்ட் தொடர்களில் பெரிய வீரர்கள் சிலருக்கு ஓய்வு அளிக்கப்படுவதால் இளம் வீரர்கள் இந்திய அணியில் வாய்ப்பு பெறுகின்றனர்.
விராட் கோலி, ஷமி, பும்ரா ஆகிய சீனியர் வீரர்கள் டி20 தொடரில் ஆடாததால், ஐபிஎல்லில் அசத்திய இளம் வீரர்களான ருதுராஜ் கெய்க்வாட், வெங்கடேஷ் ஐயர், ஹர்ஷல் படேல், ஆவேஷ் கான் ஆகிய வீரர்களுக்கு இந்திய டி20 அணியில் இடம் கிடைத்துள்ளது.
இந்நிலையில், ஐபிஎல்லில் அசத்தலாக விளையாடி14ஆவது சீசனில் அதிக ரன்களை குவித்த வீரராக சாதனையுடன் சீசனை முடித்த ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு இந்திய டி20 அணியில் இடம் கிடைத்திருக்கும் நிலையில், அவரது திறமையை வெகுவாக புகழ்ந்துள்ளார் சுனில் கவாஸ்கர்.