இதை செய்தால் மட்டுமே இங்கிலாந்து வெற்றிபெறும் - சுனில் கவாஸ்கர்!
இந்திய அணிக்கு எதிராக இங்கிலாந்து அணி எழுச்சி பெற வேண்டுமெனில் இதனை செய்தே ஆக வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தனது கருத்தினைத் தெரிவித்துள்ளார்.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகள் முடிவடைந்த நிலையில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி லீட்ஸில் ஆகஸ்ட் 25ஆம் தேதி தொடங்கவுள்ளது. இப்போட்டிக்காக இரு அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Trending
இந்நிலையில் இந்த தொடரில் இந்திய அணிக்கு எதிராக இங்கிலாந்து அணி எழுச்சி பெற வேண்டுமெனில் இதனை செய்தே ஆக வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தனது கருத்தினைத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய கவாஸ்கர், “இந்தியாவின் ஆட்டம் இங்கிலாந்து வீரர்களின் மத்தியில் மனதளவில் தாக்கத்தை கொடுத்திருக்கும். அவர்கள் அதிலிருந்து மீண்டுவர நிச்சயம் சூப்பர்மேன் போன்ற ஆட்டத்தை வெளிப்படுத்தினால் மட்டுமே இந்த தொடரில் கம்பேக் கொடுக்க முடியும்.
கிரிக்கெட் என்பது எப்போதும் அதிசயங்கள் நிகழக்கூடிய ஒரு இடம். லார்ட்ஸ் போட்டியில் கூட ஒரு கட்டத்தில் இங்கிலாந்து வெற்றி பெறும் என்று அனைவரும் எதிர்பார்த்த வேளையில் கடைசி நாளின் போது அப்படியே தலைகீழாக மாறி இந்திய அணி வெற்றி பெற்றது.
இதனால் எப்போதும் என்ன வேண்டுமானாலும் கிரிக்கெட் களத்தில் நடக்கும். இங்கிலாந்து அணியை பொருத்தமட்டில் பென் ஸ்டோக்ஸ் போன்று ஒரு திறன் படைத்த வீரரை அந்த அணி மிஸ் செய்கிறது. மேலும் பேட்டிங் யூனிட் மொத்தமும் ஜோ ரூட்டை மட்டுமே நம்பி உள்ளதால் அவர்களுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now