
Guyana Amazon Warriors vs Saint Lucia Kings, Match 29 Dream11 Prediction: வெஸ்ட் இண்டீஸில் 12ஆவது சீசன் கரீபியன் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரானது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் நாளை நடைபெறும் 29ஆவது லீக் ஆட்டத்தில் கயானா அமேசன் வாரியர்ஸ் மற்றும் செயின்ட் லூசியா கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
நடப்பு சிபில் கிரிக்கெட் தொடரில் கயானா அமேசன் வாரியர்ஸ் அணியானது விளையாடிய 8 போட்டிகளில் 6 வெற்றி, இரண்டு தோல்வியை சந்தித்து புள்ளிப்பட்டியலின் இரண்டாம் இடத்தில் உள்ளது. அதேசமயம் செயின்ட் லூசியா கிங்ஸ் அணியானது விளையாடிய 9 போட்டிகளில் 7 வெற்றி, 2 தோல்விகளைச் சந்தித்து புள்ளிப்பட்டியலின் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. இதனால் புள்ளிப்பட்டியலில் அடுத்தடுத்த இடங்களில் உள்ள இரு அணிகள் நேருக்கு நேர் மோதவுள்ளதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
GAW vs SLK: Match Details
- மோதும் அணிகள்- கயானா அமேசன் வாரியர்ஸ் vs செயின்ட் லூசியா கிங்ஸ்
- இடம் - புரோவிடன்ஸ் மைதானம், கயானா
- நேரம் - செப்டம்பர் 28, இரவு 7.30 மணி (இந்திய நேரப்படி)