சிபிஎல் 2021: கம்பேக் கொடுக்கும் கெய்ல், ஷாகிப், டூ பிளேஸிஸ்!
நடப்பாண்டு சிபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் கிறிஸ் கெய்ல், ஷாகில் அல் ஹசன், ஃபாப் டூ பிளெஸிஸ் ஆகியோர் மீண்டும் களமிறங்கவுள்ளனர்.

கரீபியன் பிரீமியர் லீக் டி20 தொடரின் நடப்பாண்டு சீசன் ஆகஸ்ட் 28ஆம் தேதி முதல் செப்டம்பர் 19ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இத்தொடருக்கான அனைத்து சிபிஎல் அணிகளும் தயாராகி வருகின்றன.
இந்நிலையில் நடப்பாண்டு சிபிஎல் தொடரில் கிறிஸ் கெய்ல், ஷாகிப் அல் ஹசன், ஃபாப் டூ பிளெஸிஸ் ஆகியோர் விளையாடுவது உறுதியாகியுள்ளது.
அதன்படி கிறிஸ் கெய்ல் செயின்ட் கிட்ஸ் அண்ட் பேட்ரியாட்ஸ் அணிக்காகவும், ஷாகிப் அல் ஹசன் ஜமைக்கா தலவாஸ் அணிக்காகவும், ஃபாப் டூ பிளெஸிஸ் செயிண்ட் லூக்காஸ் ஸாக்ஸ் அணிக்காகவும் விளையாடவுள்ளனர்.
டி20 கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இவர்கள், மீண்டும் சிபிஎல் தொடரில் களமிறங்கவுள்ளதால் அவர்களின் அதிரடியான ஆட்டத்தை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
Win Big, Make Your Cricket Tales Now