
George Bailey New Australian Chief Selector As Trevor Hohns Retires (Image Source: Google)
ஆஸ்திரேலிய அணியின் தேர்வுக்குழு தலைவராக இருந்த டிரெவர் ஹான்ஸின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில், புதிய தலைமை தேர்வாளராக முன்னாள் கேப்டன் ஜார்ஜ் பெய்லி நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 2019ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணியின் தேர்வாளராக நியமிக்கப்பட்ட ஜார்ஜ் பெய்லி, தற்போது தேர்வுக்குழு தலைவராக பதவி உயர்வை பெற்றுள்ளார்.
2012ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரை ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடிய ஜார்ஜ் பெய்லி, சில காலம் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாகவும் இருந்துள்ளார்.