முதல் ஸ்லீப்பிற்கு சென்ற கோட்ஸி வீசிய பந்து; லாவகமாக பிடித்த் கிளாசென் - வைரல் காணொளி!
ஜெரால்ட் கோட்ஸி வீசிய ஒரு பந்து விக்கெட் கீப்பர் குயின்டன் டிகாக்கை விலகி, முதல் ஸ்லீப்பில் நின்று கொண்டிருந்த ஹென்றிச் கிளாசென் கைகளுக்குச் சென்றது. அவரும் ஒரு விக்கெட் கீப்பர் என்பதால், அது குறித்து எந்த பதட்டத்தையும் காட்டாமல் வெகு இயல்பாகப் பந்தை பிடித்த காணொளி வைரலாகி வருகிறது.
ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இன்று தென் ஆப்பிரிக்கா மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதிக் கொள்ளும் போட்டி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்றதென் ஆப்ரிக்க அணியின் கேப்டன் முதலில் பதுவீசுவதாக அறிவித்தார். இந்தப் போட்டி மழையால் தாமதமான காரணத்தினால் 43 ஓவர்கள் கொண்ட போட்டியாக நடைபெற்றுவருகிறது.
பெரிய பேட்டிங் அனுபவம் இல்லாத நெதர்லாந்து பேட்ஸ்மேன்கள் ஆரம்பத்தில் உலகத்தரம் வாய்ந்த தென் ஆப்பிரிக்க அணியின் வேகப்பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் விக்கெட்டுகளை தாரை வார்த்தார்கள். நெதர்லாந்து அணி 82 ரன்களுக்கு ஐந்து விக்கெட்டுகள் இழந்தது. 140 ரன்களுக்கு ஏழு விக்கெட்டுகள் இழந்தது. மேற்கொண்டு நெதர்லாந்த அணி 200 ரன்கள் எட்டது என்று நினைத்திருந்த நிலையில், கேப்டன் எட்வார்ட்ஸ் மற்றும் கடைசி கட்ட வீரர்கள் போக்கை மாற்றினார்கள்.
Trending
இறுதிக்கட்டத்தில் வான்டர் மெர்வ் 29, ஆரியன் தத் 23 ரன்கள் எடுக்க, கேப்டன் எட்வர்ட்ஸ் ஆட்டம் இழக்காமல் 69 பந்துகளில் 10 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் உடன் 78 ரன்கள் குவித்தார். இதனால் 43 ஓவர்கள் முடிவில் நெதர்லாந்து அணி 245 ரன்கள் 8 விக்கெட் இழப்புக்கு எடுத்தது. இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி 109 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
இந்நிலையில், இப்போட்டியின் போது ஜெரால்ட் கோட்ஸி வீசிய ஒரு பந்து விக்கெட் கீப்பர் குயின்டன் டிகாக்கை விலகி, முதல் ஸ்லீப்பில் நின்று கொண்டிருந்த ஹென்றிச் கிளாசென் கைகளுக்குச் சென்றது. அவரும் ஒரு விக்கெட் கீப்பர் என்பதால், அது குறித்து எந்த பதட்டத்தையும் காட்டாமல் வெகு இயல்பாகப் பந்தை பிடித்தார்.
அப்போது கிரிக்கெட் வர்ணனையில் இருந்த இந்திய விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் கூறும் பொழுது “நான் உங்களுக்கு உறுதியா ஒன்னு சொல்றேன். நான் இதுவரைக்கும் கிரிக்கெட்ல நிறைய விஷயம் பார்த்து இருக்கேன். ஆனா இந்த மாதிரி ஒரு விஷயத்தை பார்த்ததே கிடையாது” என்று நகைச்சுவையாகக் கூறினார். இந்நிலையில் இக்காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Win Big, Make Your Cricket Tales Now