
Gerald Coetzee Earns Maiden Call-Up To South Africa Test Squad For Tour Of Australia; De Bruyn, Klaa (Image Source: Google)
தென் ஆப்பிரிக்க அணி ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்டுகள், 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. இதில் டெஸ்ட் தொடர் வரும் டிசம்பர் 17ஆம் தேதி முதல் தொடங்குகிறது. காயம் காரணமாகப் பிரபல தென் ஆப்பிரிக்க பேட்டர் கீகன் பீட்டர்சன் டெஸ்ட் தொடரிலிருந்து விலகியுள்ளார்.
இந்நிலையில் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. டீன் எல்கர் தலைமையிலான இந்த அணியில் வான் டர் டுசென், டெம்பா பவுமா ஆகியோர் தென் ஆப்பிரிக்க டெஸ்ட் அணிக்கு மீண்டும் திரும்பியுள்ளார்கள்.
அதேசமயம் 22 வயது வேகப்பந்து வீச்சாளர் ஜெரால்ட் கூட்ஸீ தென் ஆப்பிரிக்க அணியில் அறிமுக வீரராக சேர்க்கப்பட்டுள்ளார்.