SA vs SL: இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக பின்னடைவை சந்தித்த தென் ஆப்பிரிக்கா!
இலங்கை டெஸ்ட் தொடரின் போது காயமடைந்த தென் ஆப்பிரிக்க அணி வேகப்பாந்து வீச்சாளர் ஜெரால்ட் கோட்ஸி அடுத்த போட்டியில் விளையாடுவது சந்தேகம் என தகவல் வெளியாகியுள்ளது.

தென் ஆப்பிரிக்க அணி தற்சமயம் இலங்கை அணிக்கு எதிராக சொந்த மண்ணில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியானது 233 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன், 1-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரிலும் முன்னிலை வகித்துள்ளது.
மேலும் இலங்கை அணிக்கு எதிரான இந்த அபார வெற்றிக்கு பிறகு தென் ஆப்பிரிக்க அணியானது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் 5ஆம் இடத்தில் இருந்து 2ஆம் இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளது. முன்னதாக 54.17 புள்ளிகளுடன் தென் ஆப்பிரிக்க அணி 5ஆம் இடத்தில் இருந்த நிலையில் தற்போது 59.26 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திற்கு முன்னேறி அசத்தியதுடன் ஆஸ்திரேலிய அணியையும் பின்னுக்கு தள்ளி அசத்தியுள்ளது.
Trending
இதனையடுத்து தென் ஆப்பிரிக்கா - இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி க்கெபெர்ஹாவில் உள்ள செயின்ட் ஜார்ஜ் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் எதிர்வரும் டிசம்பர் 5அம் தேதி நடைபெறவுள்ளது. இப்போட்டியிலும் தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெறும் பட்சத்தில் டெஸ்ட் தொடரை கைப்பற்றுவதுடன், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியளிலும் தங்கள் இடத்தை உறுதிசெய்யும் என்பதால் இப்போட்டி மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்நிலியில் இப்போட்டிக்கு முன்னதாக தென் அப்பிரிக்க அணி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. அதன்படி இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் போது தென் ஆப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜெரால்ட் கோட்ஸி காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அவரது காயம் தீவிரமடைந்துள்ளதால், இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் கோட்ஸி விளையாடுவது சந்தேகம் என தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக இப்போட்டியின் போதே தென் ஆப்பிரிக்க வீரர் வியான் முல்டர் காயமடைந்ததுடன், இந்த டெஸ்ட் தொடரில் இருந்தும் விலகியதாக தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் அறிவித்திருந்தது. மேலும் அவருக்கான மாற்று வீரராக மேத்யூ பிரீட்ஸ்கி தென் ஆப்பிரிக்க டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்நிலையில் ஜெரால்ட் கோட்ஸியும் காயம் கரணமாக இரண்டாவது போட்டியில் பங்கேற்பது சந்தேகமாகியுள்ளது அந்த அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து பேசிய தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் டெம்பா பவுமா, “இலங்கை தொடரின் போது காயமடைந்த வியான் முல்டர் இத்தொடரில் இருந்து விலகியுள்ளார். மேலும் அவருக்கான மாற்று வீரரையும் நாங்கள் தற்போது அறிவித்துள்ளோம். அதேசமயம் இப்போட்டியின் போது காயத்தை சந்தித்துள்ள ஜெரால்ட் கோட்ஸியின் உடற்தகுதி குறித்து மருத்துவ குழுவினர் தங்களால் முடிந்ததைச் செய்ய வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
Also Read: Funding To Save Test Cricket
தென் ஆப்பிரிக்க அணி: டெம்பா பவுமா (கேப்டன்), டேவிட் பெடிங்ஹாம், மேத்யூ பிரீட்ஸ்கீ, ஜெரால்ட் கோட்ஸி, டோனி டி ஸோர்ஸி, மார்கோ ஜான்சன், கேசவ் மகாராஜ், ஐடன் மார்க்ராம், செனுரன் முத்துசாமி, டேன் பேட்டர்சன், ககிசோ ரபாடா, டிரிஸ்டன் ஸ்டப்ஸ், ரியான் ரிக்கல்டன், கைல் வெர்ரைன்.
Win Big, Make Your Cricket Tales Now