
Gilchrist Names This Batter To Open With David Warner In Future (Image Source: Google)
ஆஸ்திரேலியாவின் 28 வயதான டிராவிஸ் ஹெட் இலங்கைத் தொடரில் சிறப்பாக விளையாடி வருகிறார். மேலும், இவர் ஆஷஸ் தொடரிலும் சிறப்பாக விளையாடி தொடர் நாயகன் விருதினை வாங்கியது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இனி வரும் காலங்களில் டிராவிஸ் ஹெட் தொடக்க வீரராக டேவிட் வார்னருடன் களமிறங்குவார் என ஆஸ்திரேலியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆடம் கில்கிறிஸ்ட் கருத்துத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “நீண்ட நாள் நோக்கில் அநேகமாக அடுத்த 12 மாதங்களில் டிராவிஸ் ஹேட் ஆஸ்திரேலியாவின் தொடக்க வீரராக விளையாடுவார்.