சர்வதேச டி20 கிரிக்கெட்டில் சாதனை படைக்க காத்திருக்கும் மேக்ஸ்வெல்!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 150+ சிக்ஸர்களை அடிக்கும் உலகின் ஐந்தாவது மற்றும் முதல் ஆஸ்திரேலிய வீரர் எனும் பெருமைய கிளென் மேக்ஸ்வெல் பெறவுள்ளார்.

Glenn Maxwell, Australia vs South Africa 1st T20I Stats: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் விளையாடும் ஆஸ்திரேலிய அணியின் கிளென் மேக்ஸ்வெல் சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
ஆஸ்திரேலிய அணி சமீபத்தில் வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இத்தொடரின் முடிவில் டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றிய ஆஸ்திரேலிய அணி, அதன்பின் நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரையும் 5-0 என்ற கணக்கில் கைப்பற்றி வெஸ்ட் இண்டீஸை அதன் சொந்த மண்ணிலேயே ஒயிட்வாஷ் செய்து அசத்தியுள்ளது.
இதனையடுத்து ஆஸ்திரேலிய அணி அடுத்த மாதம் சொந்த மண்ணில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடர் ஆகஸ்ட் 10ஆம் தேதியும், ஒரு நாள் தொடரானது ஆகஸ்ட் 19ஆம் தேதி முதலும் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இந்த தொடரின் மூலம் ஆஸ்திரேலிய ஆல் ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல் சிறப்பு சாதனை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
டி20 சர்வதேச போட்டிகளில் 150 சிக்சர்கள்
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் ஐந்து சிக்ஸர்களை அடிக்கும் பட்சத்தில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தனது 150ஆவது சிக்ஸரை பூர்த்தி செய்வார். இதனை அவர் பூர்த்தி செய்யும் பட்சத்தில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 150+ சிக்ஸர்களை அடிக்கும் உலகின் ஐந்தாவது மற்றும் முதல் ஆஸ்திரேலிய வீரர் எனும் பெருமையப் பெறுவார். தற்போது வரை 121 டி20 போடிகளில் விளையாடியுள்ள மேக்ஸ்வெல் 145 சிக்ஸர்களை அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
டி20 போட்டிகளில் அதிக சிக்ஸர்கள்
- ரோஹித் சர்மா- 205
- மார்ட்டின் குப்தில்- 173
- முகமது வாசிம்- 168
- ஜோஸ் பட்லர்- 160
- நிக்கோலஸ் பூரன்- 149
- சூர்யகுமார் யாதவ்- 146
- கிளென் மேக்ஸ்வெல்- 145
அலெக்ஸ் ஹேல்ஸை முந்த வாய்ப்பு
டி20 போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் அலெக்ஸ் ஹேல்ஸை முந்தி ஐந்தாவது இடத்தை அடைய மேக்ஸ்வெல்லுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. மேக்ஸ்வெல் இதுவரை 483 போட்டிகளில் 452 இன்னிங்ஸ்களில் 562 சிக்ஸர்கள் அடித்துள்ளார், அதே நேரத்தில் அலெக்ஸ் ஹேல்ஸ் 503 போட்டிகளில் 499 இன்னிங்ஸ்களில் 566 சிக்ஸர்கள் அடித்துள்ளார். இந்நிலையில் மேக்ஸ்வெல் 4 சிக்ஸர்களை அடிக்கும் பட்சத்தில் அலெக்ஸ் ஹேல்ஸின் சாதனையை முறியடிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read: LIVE Cricket Score
ஆஸ்திரேலிய அணி: மிட்செல் மார்ஷ் (கேப்டன்), சீன் அபோட், டிம் டேவிட், பென் துவார்ஷிஸ், நாதன் எல்லிஸ், கேமரூன் கிரீன், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், மாட் குஹ்னெமன், கிளென் மேக்ஸ்வெல், மிட்செல் ஓவன், மேத்யூ ஷார்ட், ஆடம் ஜாம்பா.
Win Big, Make Your Cricket Tales Now