
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகின்றன. இதில் இன்று நடைபெற்ற 24அவது லீக் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் நெதர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டெல்லியிலுள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
டெல்லி ஆடுகளம் பேட்டிங் செய்ய சாதகமானது என்பதால் ஆஸ்திரேலியா துவக்கம் முதலே அதிரடி ஆட்டம் ஆட முடிவு செய்தது. டேவிட் வார்னர் 93 பந்துகளில் 104 ரன்கள் குவித்தார். ஸ்டீவ் ஸ்மித் 68 பந்துகளில் 71 ரன்கள் குவித்தார். மார்னஸ் லபுஷாக்னே அதிரடியாக விளையாடி 47 பந்துகளில் 62 ரன்கள் குவித்தார். கடைசி 10 ஓவர்களை நெருங்கிய போது அதிரடி வீரர் கிளென் மேக்ஸ்வெல் களமிறக்கப்பட்டார்.
அவர் வந்தது முதலே 200 ஸ்ட்ரைக் ரேட்டில் தான் விளையாடினார். தொடர்ந்து பவுண்டரியும், சிக்சர்களுமாக விளாசித்தள்ளிய மேக்ஸ்வெல் 40 பந்துகளில் சதம் அடித்து கிரிக்கெட் உலகை தெறிக்க விட்டார். உலகக்கோப்பை வரலாற்றில் மிக குறைந்த பந்துகளில் அடிக்கப்பட்ட சதம் இதுதான்.