இந்த வெற்றிகளை அப்படியே தொடர்வோம் - கிளென் மேக்ஸ்வெல்!
இறுதியாக இந்த தொடரில் நான் தற்போது நல்ல ரிதத்தில் வந்துள்ளதாக நினைக்கிறேன். இந்த ஆட்டம் எனக்கு மிகப்பெரிய உத்வேகத்தை அளித்துள்ளது கிளென் மேக்ஸ்வெல் தெரிவித்துள்ளார்.
இன்று டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற்று முடிந்த உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 24ஆஆவது லீக் ஆட்டத்தில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆஸ்திரேலிய அணியானது 309 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்து அணியை சுருட்டி இந்த உலகக் கோப்பை தொடரில் தங்களது மூன்றாவது வெற்றியை பதிவு செய்ததோடு புள்ளி பட்டியலிலும் தற்போது நான்காவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
இன்றைய போட்டி துவங்கியதும் டாசில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 399 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலியா அணி சார்பாக டேவிட் வார்னர் 104 ரன்களையும், மேக்ஸ்வெல் 106 ரன்களையும் குவித்தனர்.
Trending
பின்னர் 400 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய நெதர்லாந்து அணியானது ஆஸ்திரேலிய அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் 21 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 90 ரன்களை மட்டுமே குவித்தது.
இதன் காரணமாக ஆஸ்திரேலிய அணி 309 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆஸ்திரேலிய அணியின் அதிரடி ஆட்டக்காரர் மேக்ஸ்வெல் 44 பந்துகளில் 9 பவுண்டரி மற்றும் 8 சிக்ஸர்கள் என 106 ரன்கள் குவித்ததன் காரணமாக அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
பின்னர் போட்டி முடிந்து தனது சிறப்பான செயல்பாடு குறித்து பேசிய ஆட்டநாயகன் மேக்ஸ்வெல், “கடைசி நேரத்தில் எங்கள் அணிக்கு நல்ல ரன் குவிப்பை வழங்க வேண்டும் என்று நினைத்து தான் அதிரடியாக விளையாடினேன். இந்த மைதானத்தில் இரவில் நன்றாக பேட்டிங் செய்ய முடியும். எனவே நானா நிறைய ரன்களை அடிக்கவேண்டும் என்ற முடிவை எடுத்து அதிரடியாக ஆடினேன். இறுதியாக இந்த தொடரில் நான் தற்போது நல்ல ரிதத்தில் வந்துள்ளதாக நினைக்கிறேன். இந்த ஆட்டம் எனக்கு மிகப்பெரிய உத்வேகத்தை அளித்துள்ளது.
நாம் தொடர்ச்சியாக ரன் அடிக்காத போது ஒரு சிலர் நம் மீது சில கேள்விகளை எழுப்புவார்கள். ஆனால் அவர்களுக்கெல்லாம் பதிலளிக்கும் விதமாக இந்த ஆட்டம் இருந்திருக்கிறது. நிச்சயமாக இந்த பார்மை நான் அப்படியே கொண்டு செல்ல விரும்புகிறேன். இந்த போட்டியில் நாங்கள் அனைத்து துறைகளிலும் சிறப்பாக செயல்பட்டோம். இந்த தொடரில் இதுவரை மூன்று வெற்றிகளை பெற்றுள்ளோம். நிச்சயம் இந்த வெற்றிகளை அப்படியே தொடர்வோம்” என கூறியுள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now