இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரானது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நடைபெற்று முடிந்துள்ள மூன்று போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் தொடரை சமன் செய்துள்ளது. இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது டி20 போட்டி நவம்பர் 6ஆம் தேதி குயின்ஸ்லாந்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டிகாக இரு அணி வீரர்களு தயாராகி வருகின்றனர்.
டிராவிஸ் ஹெட்டுக்கு பதிலாக கிளென் மேக்ஸ்வெல்
இந்நிலையில் இப்போட்டிக்கான ஆஸ்திரேலியா அணியில் இருந்து டிராவிஸ் ஹெட் நீக்கப்பட்டுள்ளார். எதிர்வரும் ஆஷஸ் டெஸ்ட்டுக்கு தயாராகும் வகையில் அவர் கடைசி இரண்டு டி20 போட்டிகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அவருக்கு பதிலாக அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல் பிளேயிங் லெவனில் சேர்க்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை ஆஸ்திரேலிய அணிக்காக 124 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள மேக்ஸ்வெல் 2,833 ரன்களையும், 49 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.