
உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலியா- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2ஆவது அரையிறுதி போட்டி நாளை கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இரு அணிகளும் நடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்நிலையில், ஆஸ்திரேலிய அணியின் அதிரடி வீரரான கிளென் மேக்ஸ்வெல் ஆஃப்கானிஸ்தான் அணிக்கெதிராக இரட்டை சதம் அடித்து அணியை வெற்றிபெற வைத்தார். ஒரு கட்டத்தில் ஆஸ்திரேலியா 18.3 ஓவரில் 91 ரன்கள் எடுப்பதற்குள் 7 விக்கெட்டுகளை இழந்திருந்தது.
அதன்பின் மேக்ஸ்வெல் தனி ஒருவரால் அணியை வெற்றி பெற வைத்தார். விளைாடும்போது அவருக்கு அடிக்கடி தசைப்பிடிப்பு ஏற்பட்டு, வலியால் துடித்தார். இதன்காரணமாக ஆஸ்திரேலியாவின் கடைசி லீக் ஆட்டத்தில் அவர் விளையாடவில்லை. இந்நிலையில் நாளைய போட்டியில் அவர் விளையாடுவாரா என்ற கேள்விக்கு ஆஸ்திரேலிய அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் பதிலளித்துள்ளார்.