
அமெரிக்காவில் நடைபெற்று வரும் இரண்டாவது சீசன் மேஜர் லீக் கிரிக்கெட் தொடரானது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் இன்று நடைபெற்ற குவாஃபையர் ஆட்டத்தில் ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான வாஷிங்டன் ஃப்ரீடம் அணியும், கோரி ஆண்டர்சன் தலைமையில் சான் ஃபிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற வாஷிங்டன் ஃப்ரீடம் அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய யூனிகார்ன்ஸ் அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் எதிரணியின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர். பின்னர் ஜோடி சேர்ந்த ஹசன் கான் மற்றும் கெப்டன் கோரி ஆண்டர்சன் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துடன் அணியின் ஸ்கோரையும் உயர்த்தினர். இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹசன் கான் அரைசதம் கடந்தும் அசத்தினார்.
இதன்மூலம் சான் ஃபிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் அணியானது 19 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 145 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதில் அதிகபட்சமாக ஹசன் கான் 57 ரன்களைச் சேர்த்தார். வாஷிங்டன் அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய ரச்சின் ரவீந்திரா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய வாஷிங்டன் ஃப்ரீடம் அணியிலும் ஸ்டீவ் ஸ்மித், ஆண்ட்ரிஸ் கஸ், ரச்சின் ரவீந்திரா உள்ளிட்ட வீரர்கள் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர்.