Advertisement

ஆஷஸ் தொடரை ஆஸ்திரேலிய 4-0 என்ற கணக்கில் வெல்லும் - டேவிட் வார்னர்!

ஆஷஸ் டெஸ்ட் தொடரை 4-0 என ஆஸ்திரேலிய அணி வெற்றி பெறும் என்று தொடக்க வீரர் டேவிட் வார்னர் கூறியுள்ளார். 

Advertisement
'Glenn McGrath Says Australia Will Win The Ashes 5-0, I Say 4-0' : David Warner
'Glenn McGrath Says Australia Will Win The Ashes 5-0, I Say 4-0' : David Warner (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Oct 28, 2021 • 03:36 PM

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் டிசம்பர், ஜனவரி மாதங்களில் நடைபெறவுள்ளது. இரு வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் ஆஷஸ் தொடர், இந்த வருடம் ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan
October 28, 2021 • 03:36 PM

அதன்படி டிசம்பர் 8ஆம் தேதி ஆரம்பிக்கும் ஆஷஸ் தொடர், ஜனவரி 18ஆம் தேதி அன்று முடிவடைகிறது. மகளிர் ஆஷஸ் டெஸ்ட் கான்பெர்ராவில் ஜனவரி 27 அன்று தொடங்குகிறது. 

Trending

கடந்த 2019-ல் இங்கிலாந்தில் நடைபெற்ற ஆஷஸ் தொடர் 2-2 என சமனில் முடிந்தது. இதுவரை நடைபெற்ற 71 ஆஷஸ் தொடர்களில் 33-ல் ஆஸ்திரேலியாவும் 32-ல் இங்கிலாந்தும் வென்றுள்ளன. 6 தொடர்கள் சமனில் முடிந்துள்ளன. 

இந்நிலையில் ஆஷஸ் டெஸ்ட் தொடரை 4-0 என ஆஸ்திரேலிய அணி வெற்றி பெறும் என்று அந்த அணியின் தொடக்க வீரர் டேவிட் வார்னர் கூறியுள்ளார். 

இதுகுறித்து பேசிய அவர், “தலைப்புச் செய்திகளை வழங்குவதில் நான் சிறந்தவன். இது சவால் அளிக்கக்கூடியது. 5-0 என்கிற வெற்றியை மெக்ராத் விரும்புவார். ஆஸ்திரேலிய அணிக்கு 4-0 வெற்றி கிடைக்கும் என்கிறேன். வானிலை காரணமாக ஒரு டெஸ்டின் முடிவை கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை. 

Also Read: டி20 உலகக் கோப்பை 2021

நான் சரியாக ரன்கள் எடுக்காதபோது கடுமையாகப் போராடிச் சிறப்பாக விளையாடுவேன். கடந்த 18 மாதங்களாக கரோனா காரணமாக தொடர்ச்சியாக விளையாட முடியாமல் போனது. அடுத்தடுத்து தொடர்களில் முன்பு விளையாடினோம். அதுபோல அடுத்தடுத்த ஆட்டங்களில் விளையாட முயல்கிறேன்” என்று தெரிவித்தார்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement