
இலங்கை - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி நேற்று தம்புளாவில் நடைபெற்றது. மழை காரணமாக தாமதமாக தொடங்கிய இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணியில்வில் யங், ஜோஷ் கிளார்க்சன் ஆகியோரைத் தவிர்த்து மற்ற வீரர்கள் யாரும் ரன்களைச் சேர்க்க தவாறியதன் காரணமாக, அந்த அணி 19.3 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 108 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
அந்த அணியில் அதிகபட்சமாக வில் யங் 30 ரன்களையும், ஜோஷ் கிளார்க்சன் 24 ரன்களையும் ரன்களையும் எடுத்தனர். இலங்கை அணி தரப்பில் வநிந்து ஹசரங்கா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனைத்தொடர்ந்து 109 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணியில் பதும் நிஷாங்காவைத் தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து நியூசிலாந்து அணியின் பந்துவீசுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
இருப்பினும் இறுதிவரை போராடிய நிஷங்கா தனது அரைசதத்தைப் பதிவுசெய்திருந்த நிலையில் 52 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க இலங்கை அணியின் தோல்வியும் உறுதியானது. இதனால் இலங்கை அணி 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 103 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. நியூசிலாந்து தரப்பில் லோக்கி ஃபெர்குசன், கிளென் பிலீப்ஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.