Advertisement

மீண்டும் கம்பேக் கொடுக்கும் யுவராஜ் சிங்!

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்திருந்த யுவராஜ் சிங் தற்போது மீண்டும் வருகிற பிப்ரவரி மாதம் முதல் கிரிக்கெட் விளையாடவுள்ளதாக அறிவித்துள்ளார்.

Advertisement
'God decides your destiny': Yuvraj Singh hints at comeback from retirement in February
'God decides your destiny': Yuvraj Singh hints at comeback from retirement in February (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Nov 02, 2021 • 05:40 PM

கடந்த 2011ஆம் ஆண்டில் இந்திய அணி உலகக் கோப்பை வெல்ல முக்கிய காரணமாக இருந்தவர்களில் யுவராஜ் சிங்கும் ஒருவர். அதேபோல், 2007இல் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிராக 6 பந்துகளில் 6 சிக்ஸர் விளாசி கெத்து காட்டி அசத்தினார். 

Bharathi Kannan
By Bharathi Kannan
November 02, 2021 • 05:40 PM

இவர் இந்திய அணியிலிருந்து ஓய்வை அறிவித்தாலும்கூட, இன்றளவும் யுவராஜ் மீண்டும் இந்திய அணிக்கு திரும்ப வேண்டும் என அவரது ரசிகர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.

Trending

இந்நிலையில் தற்போது, டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி, பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்துக்கு எதிரான தோற்று அரையிறுதி வாய்ப்பை கிட்டதட்ட இழந்துவிட்ட நிலையில், யுவராஜ் சிங் மீண்டும் இந்திய அணிக்குத் திரும்ப வேண்டும் என்ற கோரிக்கை மேலும் வலுக்கத் தொடங்கியுள்ளது.

இந்த கோரிக்கைக்கு செவி சாய்த்துள்ள யுவராஜ் சிங், “கடவுள்தான் உங்கள் தலைவிதியைத் தீர்மானிக்கிறார். மக்கள் கோரிக்கை வைத்து வருவதால், நான் பிப்ரவரி மாதம் முதல் அணிக்கு திரும்புவேன். உங்கள் அன்புக்கும், வாழ்த்துக்கும் நன்றி. இது நமது அணி. கடுமையான நேரங்களிலும் உண்மையான ரசிகர்கள் இந்திய அணிக்கு ஆதரவு அளிப்பார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

ஆனால் பிசிசிஐ விதிமுறைப்படி இந்திய அணியிலிருந்து ஓய்வு அறிவித்த ஒருவர் மட்டுமே வெளிநாடுகளில் நடக்கும் டி20 பிரிமியர் லீக் போன்ற போட்டிகளில் பங்கேற்க முடியும். இதற்காகவே, யுவராஜ் சிங் ஓய்வு அறிவித்துவிட்டு கனடா பிரிமியர் லீக் தொடரில் பங்கேற்றார். 

Also Read: T20 World Cup 2021

இந்நிலையில், அவர் மீண்டும் அணிக்குள் சேர்க்கப்பட்டால், அது தவறான உதாரணமாகிவிடும். இதன்காரணமாக, அவர் மீண்டும் அணிக்குள் சேர்க்கப்படுவது இயலாத காரியம் என கிரிக்கெட் விமர்சகர்கள் கருதுகிறார்கள்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement