
Good to see bowlers putting balls in right areas: KL Rahul (Image Source: Google)
ஜிம்பாப்வே சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, ஜிம்பாப்வே அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. இந்த தொடரின் முதல் போட்டி ஜிம்பாப்வேவின் ஹராரே மைதானத்தில் நடைபெற்றது.
இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி வெறும் 189 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. இதனையடுத்து 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி களமிறங்கிய இந்திய அணிக்கு சுப்மன் கில்லும், ஷிகர் தவானும் அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து வெற்றிபெற செய்தனர்.
இதன்மூலம் இந்திய அனி 30.5 ஓவரில் இலக்கையும் அடைந்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியைப் பதிவு செய்தது. இதில் ஷிகர் தவான் 81 ரன்களுடனும், சுப்மன் கில் 82 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்த வெற்றியின் மூலம், 1-0 என்ற கணக்கில் இந்திய அணி தொடரிலும் முன்னிலை பெற்றுள்ளது.