Advertisement

ஒரு அணியாக எங்களுடைய முயற்சி மிகச் சிறப்பாக இருந்தது - ஐடன் மார்க்ரம்!

டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான போட்டியில் வெற்றிபெற்றது குறித்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் ஐடன் மார்க்ரம் விளக்கமளித்துள்ளார். 

Advertisement
‘Good to see the team show skill and character’ - Aiden Markram
‘Good to see the team show skill and character’ - Aiden Markram (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Apr 30, 2023 • 01:00 PM

16ஆவது சீசன் ஐபிஎல் தொடரின் 40ஆவது லீக் போட்டியானது நேற்று இரவு டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ஐடன் மார்க்ரம் தலைமையிலான சன்ரைசஸ் ஹைதராபாத் அணியும், டேவிட் வார்னர் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதின. அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் மார்க்ரம் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.

Bharathi Kannan
By Bharathi Kannan
April 30, 2023 • 01:00 PM

அதன்படி முதலில் விளையாடிய சன்ரைசர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 197 ரன்களை குவித்தது. சன்ரைசர்ஸ் அணி சார்பாக அபிஷேக் சர்மா 67 ரன்களையும், ஹென்ரிச் கிளாசன் 53 ரன்களையும் குவித்து அசத்தினர். பின்னர் 198 ரன்கள் அடித்தால் வெற்றியின் இலக்குடன் விளையாடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியானது 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 188 ரன்கள் குவித்ததால் 9 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் அணி இந்த போட்டியில் வெற்றி பெற்றது.

Trending

இந்நிலையில் இந்த போட்டியில் அடைந்த வெற்றிக்கு பிறகு பேசிய சன் ரைசர்ஸ் அணியின் கேப்டன் ஐடன் மார்க்ரம், “ஒரு அணியாக எங்களுடைய முயற்சி மிகச் சிறப்பாக இருந்தது. ஒவ்வொரு வீரரும் தங்களது திறனை இந்த போட்டியில் வெளிக்காட்டினார். எந்த ஒரு இடத்திலும் நாங்கள் தவறு செய்யவில்லை என்று நினைக்கிறேன். இருந்தாலும் இந்த முடிவிற்கு காரணம் இரண்டு வீரர்கள் தான். 

அபிஷேக் ஷர்மா போட்டியின் ஆரம்பத்திலேயே மிகச் சிறப்பான துவக்கத்தை அளித்து விளையாடி அணியை கொண்டு சென்றார். அதேபோன்று பின்வரிசையில் கிளாசன் மிகச் சிறப்பாக ஆடி பெரிய ரன் குவிப்பிற்கு அழைத்துச் சென்றார். கிளாசன் மீண்டும் இதேபோன்று அதிரடியாக விளையாடுவதை பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. பிற்பகுதியில் பந்துவீச்சாளர்களும் மிக அருமையாக செயல்பட்டு வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்” என்று தெரிவித்துள்ளார். 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement