
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரின் முதல் போட்டியிலேயே வெற்றிபெற்று அசத்திய இங்கிலாந்து, அதன்பின் நடைபெற்று மூன்று போட்டிகளிலும் தோல்வியைத் தழுவி 1-3 என்ற கணக்கில் இந்திய அணியிடம் தொடரையும் இழந்துள்ளது. இதன்மூலம் அந்த பென் ஸ்டோக்ஸ் தலைமையில் இங்கிலாந்து தங்களது முதல் டெஸ்ட் தொடரை இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நான்காவது டெஸ்ட் போட்டி தோல்விக்கு பின் பேசிய இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ், “இது ஒரு சிறந்த டெஸ்ட் போட்டி என்று நினைக்கிறேன். இந்தியா ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக ஸ்கோர்கார்ட் கூறுகிறது. ஆனால் ஒட்டுமொத்த ஆட்டத்தை சுருக்கமாகச் சொல்லும் அளவுக்கு அது போதிய மதிப்பை அளிக்கவில்லை என்று நினைக்கிறேன்.
இப்போட்டியில் பல ஏற்ற இறக்கங்கள் இருந்தன. எங்கள் அணியின் சுழற்பந்து வீச்சாளர்களான டாம் ஹார்ட்லி மற்றும் ஷோயப் பஷீர் இன்று மட்டுமல்ல, இந்த முழு டெஸ்ட் போட்டியின் போதும் அவர்கள் எப்படி செயல்பட்டார்கள் என்பதற்கு நான் அவர்களுக்கு மிகவும் பெருமை சேர்க்க வேண்டும். ஏனெனில் அவர்கள் தங்களின் தொழில் வாழ்க்கையின் ஆரம்ப கட்டத்தில் இப்படி செயல்பட்டு வருவது நம்பமுடியாதது.